Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மினி ஆட்டோ மோதி மூதாட்டி பரிதாப பலி

மினி ஆட்டோ மோதி மூதாட்டி பரிதாப பலி

மினி ஆட்டோ மோதி மூதாட்டி பரிதாப பலி

மினி ஆட்டோ மோதி மூதாட்டி பரிதாப பலி

ADDED : அக் 08, 2011 01:27 AM


Google News
மோகனூர்: வளையப்பட்டியில், சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மினி ஆட்டோ மோதியதில், பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மோகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோகனூர் அடுத்த வளையப்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன் மனைவி காத்தாயி (65). அவர், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டு சாலையை கடந்துள்ளார். அப்போது, வளையப்பட்டியில் இருந்து மோகனூர் நோக்கி பால் ஏற்றிச் சென்ற மினி ஆட்டோ, எதிர்பாராதவிதமாக காத்தாயி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காத்தாயியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். சம்பவம் குறித்து, மோகனூர் போலீஸார் வழக்கு பதிந்து, மினி ஆட்டோ டிரைவர் சுப்புராஜை (24), கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us