/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இரட்டை கொலை வழக்கில் திருப்பம் :கணவர் தற்கொலையால் தொடரும் மர்மம்மதுரை இரட்டை கொலை வழக்கில் திருப்பம் :கணவர் தற்கொலையால் தொடரும் மர்மம்
மதுரை இரட்டை கொலை வழக்கில் திருப்பம் :கணவர் தற்கொலையால் தொடரும் மர்மம்
மதுரை இரட்டை கொலை வழக்கில் திருப்பம் :கணவர் தற்கொலையால் தொடரும் மர்மம்
மதுரை இரட்டை கொலை வழக்கில் திருப்பம் :கணவர் தற்கொலையால் தொடரும் மர்மம்
ADDED : செப் 27, 2011 10:50 PM
மதுரை : மதுரையில் நகை, பணத்திற்காக தாய், மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில்,
திடீர் திருப்பமாக கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து
கொண்டார்.
இதனால் இரட்டை கொலையில் உண்மையில் நடந்தது என்ன? கொலையாளி யார்
என்ற விபரம் கிடைப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.மதுரை
காமராஜர் ரோடு நவரத்னபுரம் 2வது தெருவில் வசிப்பவர் டெய்லர் விஜயகுமார்,
38. மனைவி துர்காதேவி, மகன் ஸ்ரீராமுடன் முதல் தளத்தில் வசித்தார்.
கீழ்தளத்தில் சகோதரர் ஜெயக்குமார் குடும்பம் வசிக்கிறது. செப்.,12 இரவு
9.30 மணிக்கு பத்தரை பவுன் நகை மற்றும் ரூ.86 ஆயிரத்திற்காக
துர்காதேவியையும், ஸ்ரீராமையும் மர்மநபர் கழுத்தறுத்து கொலை செய்தார்.
இவ்வழக்கில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கும் நிலையில் எந்த
'க்ளூ'வும் கிடைக்கவில்லை. விஜயகுமாரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்தது.
கொலை நடந்த இடத்தில் விசாரித்து வந்த போலீசார், செப்.,19 மாலையில்
வீட்டுச்சாவியை விஜயகுமாரிடம் கொடுத்தனர். வீட்டில் தங்கிய விஜயகுமார்,
மனைவி, மகனை நினைத்து அழுது, செப்.,20 மாலை 4.45 மணிக்கு மாடியில் இருந்து
குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு
நேற்று முன் தினம் இரவு இறந்தார். விடை தெரியாத கேள்விகள்: போலீஸ்
விசாரணையின்போது, கொலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய
விஜயகுமார், திடீரென்று தற்கொலைக்கு முயன்றது போலீசாரை அதிர்ச்சி அடைய
வைத்தது. அவர்கள் கூறியதாவது:விஜயகுமாருக்கு தொடர்புடையவர்கள் இதில்
ஈடுபட்டிருக்கலாம் அல்லது அவருக்கே இதில் தொடர்பு இருக்கலாம் என்ற
கோணத்தில் விசாரித்தோம். ஒருவேளை கொலையாளி பிடிபட்டால், எங்கே தான்
மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம். உயிர்
பிழைத்திருந்தால் மர்மம் விலகாத கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும்.
ஒருவேளை தானே கொலை செய்துவிட்டு, எங்களிடம் ஒன்றும் தெரியாதது போல்
நாடகமாடி தற்கொலை செய்துகொண்டாரா என்ற சந்தேகமும் உண்டு. இவ்வாறு கூறினர்.
மர்ம முடிச்சுகள் அவிழாத விராட்டிப்பத்து லதா, முடக்குச்சாலை சிவகாளித்தேவி
கொலை வழக்கு பட்டியலில், இந்த இரட்டை கொலையும், விஜயகுமாரின் தற்கொலையும்
சேர்ந்து உள்ளது.


