Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மாடல் அழகியிடம் காதலைச் சொல்ல ஷேர்ன் வார்னே திட்டம்!

மாடல் அழகியிடம் காதலைச் சொல்ல ஷேர்ன் வார்னே திட்டம்!

மாடல் அழகியிடம் காதலைச் சொல்ல ஷேர்ன் வார்னே திட்டம்!

மாடல் அழகியிடம் காதலைச் சொல்ல ஷேர்ன் வார்னே திட்டம்!

ADDED : செப் 27, 2011 02:33 PM


Google News
Latest Tamil News
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேர்ன் வார்னே, அவரது தோழியும் மாடல் அழகியுமான எலிசபெத் ஹர்லியிடம் விரைவில் காதலைச் சொல்ல திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எலிசபெத் ஹர்லி, அவரது கணவரை விவகாரத்து செய்த பின்னர் ஷேர்ன் வார்னேயுடன் நெருங்கிப் பழகி வந்தார். ஷேர்ன் வார்னேயும், எலிசபெத் ஹர்லியும் ட்விட்டரி்ல பறிமாறிக் கொண்ட செய்திகள் அவர்கள் இருவருக்கும் நட்பைத் தாண்டியும் ஏதோ உறவு இருப்பதை யூகிக்‌கச் செய்தது.

இந்நிலையில் வார்னே விரைவில் தனது காதலை எலிசபெத்திடம் சொல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவிலும்- இந்தியாவிலும் மாறி மாறி ஜோடி போட்டுச் சுற்றி திரிந்த இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஹர்லி அவரது மகனை, ஷேர்ன் வார்னின் குழந்தைகளுக்கும் அவரது மாஜி மனைவிக்கும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். ஷேர்ன் வார்னும் அவரது மனைவி சிமோன் காலஹனும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us