/உள்ளூர் செய்திகள்/திருச்சி/இளம்பெண்ணை கடத்திய வழக்கு இன்ஸ்.,க்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்இளம்பெண்ணை கடத்திய வழக்கு இன்ஸ்.,க்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்
இளம்பெண்ணை கடத்திய வழக்கு இன்ஸ்.,க்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்
இளம்பெண்ணை கடத்திய வழக்கு இன்ஸ்.,க்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்
இளம்பெண்ணை கடத்திய வழக்கு இன்ஸ்.,க்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்
ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
திருச்சி: திருச்சியில் இளம்பெண்ணை கடத்திச் சென்ற வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீனுக்கு எதிர்ப்பு வலுப்பதால், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட தீண்டாமை ஒழிப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் கண்ணன். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பஸ்ஸ்டாண்ட் அருகே காதலனுடன் நின்றிருந்த பரணி என்ற பெண்ணை, தன்னை டி.எஸ்.பி., என்றுகூறி, அந்த பெண்ணை மட்டும் தனியாக காரில் கடத்திச் சென்று விட்டார். போதையில் பெண்ணை கடத்திய இன்ஸ்பெக்டர் கண்ணன் காலையில் அந்த பெண்ணை புதுக்கோட்டை அருகில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், கண்டோன்மெண்ட் போலீஸார் இன்ஸ்பெக்டர் கண்ணனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவருடைய ஜாமீன் மனு முதலில் திருச்சி ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சக்திவேல் என்பவர் செய்த மனுவின் பேரில், முன்னாள் வக்கீல் சங்க செயலாளர் சீனிவாசன், அலெக்ஸ் உள்ளிட்ட நான்கு பேர் ஆஜராகி வாதாடினர். இதனால் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
அடுத்ததாக நேற்று காலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல்தாஸூடம் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும் பெண் வக்கீல் வனஜா என்பவர் பெண்கள் அமைப்பின் சார்பில், ஆஜராகி இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பேரில் வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்தாஸ் ஜாமீன் மீதான தீர்ப்பை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இளம்பெண்ணை மிரட்டி காரில் கடத்திச் சென்ற இன்ஸ்பெக்டர் கண்ணனின் ஜாமீன் மனுவுக்கு எதிரான பொதுநல அடிப்படையில் வக்கீல்கள் தொடர்ந்து ஆஜராகி வாதாடி வருவதால், அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.