/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளிகளில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம்பள்ளிகளில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம்
பள்ளிகளில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம்
பள்ளிகளில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம்
பள்ளிகளில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம்
ADDED : ஜூலை 14, 2011 09:48 PM
உடுமலை : உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில்,
நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பில், சுற்றுச்சூழல் கருத்தரங்கு மற்றும்
மரக்கன்று நடும் விழா நடந்தது.
பசுமை இந்தியா, மரம் வளர்ப்போம், காடுகளை
பாதுகாப்போம் என்ற தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். சிறந்த படைப்புகள்
தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. பெரியவாளவாடி நாராயணசாமி
அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பசுமைப்படை விழிப்புணர்வு பேரணி
சென்றனர். பள்ளியின் தலைமையாசிரியர் முத்துமாணிக்கம், ஆசிரியர்கள்
பங்கேற்றனர். ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல்
மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில், சைக்கிள் பேரணி நடந்தது. பள்ளி
தலைமையாசிரியர் அக்பர் பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் மரக்கன்றுகளை
வளர்த்தல், புகையிலை பொருட்களை தவிர்த்தல், பிளாஸ்டிக் பைகளை ஒழித்தல்,
புவி வெப்பமயமாதல், இயற்கை ஆற்றல்களான சூரிய சக்தி, காற்றாலை ஆற்றல்
குறித்து வலியுறுத்தப்பட்டது.


