ADDED : ஜூலை 15, 2011 10:02 PM
சிவகங்கை : தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க வட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது.
வட்ட தலைவர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் குணசேகரன் வரவேற்றார். வட்ட செயலாளர் சண்முகபாண்டியன், பொருளாளர் பாலமுருகன் அறிக்கை சமர்ப்பித்தனர். மாநில பொது செயலாளர் சுப்பிரமணியன், இணை செயலாளர் குருசேவ், துணை பொது செயலாளர் இமானுவேல் தனபால் இணை பொது செயலாளர் ரவி, மதுரை மண்டல தலைவர் முத்துலிங்கம் பேசினர். சங்க உறுப்பினர்கள் மின் சிக்கனம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம், துண்டு பிரசுரங்களை வினியோகித்து, மின் நுகர்வோர், பொது மக்கள் கூடும் இடங்களில் பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் பிரான்சிஸ் புஷ்பராஜ் நன்றி கூறினார்.


