நில அபகரிப்பு புகார்: கொடைக்கானல் நகராட்சி தலைவர் கைது
நில அபகரிப்பு புகார்: கொடைக்கானல் நகராட்சி தலைவர் கைது
நில அபகரிப்பு புகார்: கொடைக்கானல் நகராட்சி தலைவர் கைது
UPDATED : ஜூலை 12, 2011 10:57 PM
ADDED : ஜூலை 12, 2011 10:16 PM

கொடைக்கானல்: கொடைக்கானல் நாயுடுபுரம்புரத்தில் வெல்வின் என்ற காட்டேஜ் உள்ளது. கிறிஸ்தவசபைக்கு சொந்தமான நான்குஏக்கர் நிலத்தை, ஜான்ரோஷன்என்பவர் பராமரித்து வந்தார்.கடந்த மார்ச் 26 ல், டி.ஜி.பி.,யிடம் அவர் அளித்த புகாரில், 'நிலம், வீட்டை அபகரித்து, சிலர்மிரட்டுகின்றனர்,' என, தெரிவித்திருந்தார். தி.மு.க., ஆட்சியில்,கிடப்பில் போடப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், நில அபகரிப்பு புகார்குறித்து விசாரிக்க தனி பிரிவு துவக்கப்பட்டுள்ள நிலையில், புகார் தூசு தட்டப்பட்டது. மேலும்,அந்த வீடு சேதப்படுத்தப்பட்டு உரிமையாளர்கள் விரட்டப்பட்டதாக புகார் பதிவானது. இதற்கு உடந்தையாக செயல்பட்டு 'கட்டப்பஞ்சாயத்து' செய்ததாக, கொடைக்கானல் நகராட்சிதலைவரை, காலை 6 மணிக்கு, போலீசார்கைது செய்தனர். விசாரணைக்காக தாண்டிக்கு டிஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில்,மதியம் வரை அங்கு வைக்கப்பட்டிருந்தார். டி.எஸ்.பி., பால்ராஜ், இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தனி அறையில் வைத்து விசாரித்தனர். மதியம்2 மணிக்கு, நகராட்சி தலைவர், புரோக்கர்கள் தலீப்சிங், சேகர் செபாஸ்டீன் கொடைக்கானல் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் ரிமாண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் மீது147, 148, 387, 420, 34 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சிக்கலில் ஐ.ஜி.,: தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு புகாரில் தி.மு.க., வினர் கைது செய்யப்பட்டுவருகின்றனர். இந்நிலையில்,தி.மு.க., தலைமைக்குநெருக்கமாகஇருந்த ஐ.ஜி., சிவனாண்டி,கொடைக்கானல் நில அபகரிப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளார். புகார் அளித்த ஜான் ரோஷனின் நண்பரான ஐ.ஜி., காலப்போக்கில், ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்து, நிலத்தை அபகரிக்க துணை போனதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஜான்ரோஷன் அளித்த புகாரில், 'மேற்கு மண்டலஐ.ஜி., யாக இருந்த போது, போனில் என்னைமிரட்டினார்,' என, தெரிவித்துள்ளார். முதல் தகவல் அறிக்கையில், ஜான் ரோஷன் கூறியுள்ளபுகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஐ.ஜி.,மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவர்மீதும் அபகரிப்பு வழக்குபாயும் என, தெரிகிறது.


