/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மருத்துவ நிதி உதவி திட்டத்தில் சேர்வதற்கு காலக்கெடு: குடும்ப ஓய்வூதியர்கள் பாதிப்புமருத்துவ நிதி உதவி திட்டத்தில் சேர்வதற்கு காலக்கெடு: குடும்ப ஓய்வூதியர்கள் பாதிப்பு
மருத்துவ நிதி உதவி திட்டத்தில் சேர்வதற்கு காலக்கெடு: குடும்ப ஓய்வூதியர்கள் பாதிப்பு
மருத்துவ நிதி உதவி திட்டத்தில் சேர்வதற்கு காலக்கெடு: குடும்ப ஓய்வூதியர்கள் பாதிப்பு
மருத்துவ நிதி உதவி திட்டத்தில் சேர்வதற்கு காலக்கெடு: குடும்ப ஓய்வூதியர்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 15, 2011 09:57 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: மருத்துவ நிதி உதவி திட்டத்தில் சேர காலக்கெடு நிர்ணயித்ததால் நிதி உதவி கிடைக்காமல், ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் மருத்துவ நிதி உதவி திட்டத்தின் கீழ், ஓய்வூதியர்கள் பயன் பெறுவதற்காக மாதம்தோறும் 70 ரூபாய் பிடித்தம் செய்து, அவர்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவில் 75 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது.
இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 2009 செப்.30ம் தேதி வெளியிட்ட அரசு உத்தரவின் படி, 2010 ஜூன்30ம் தேதி வரை ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் இந்த நிதி உதவி திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்று வந்தனர். அதன் பின் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மருத்துவ நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையை தவிர்க்க, ஓய்வூதியம் பெறுவர்கள் மருத்துவ நிதி உதவி திட்டத்தில் சேர, காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யாமல், அனைவரும் சேர்ந்து பயன் பெற தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென ஓய்வூதியர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள், குடும்ப ஓய்வூதியர் சங்க ஸ்ரீவி., கிளை செயலாளர் காளிமுத்து கூறியதாவது: கடந்த அரசு மருத்துவ நிதி உதவி திட்டத்தில் சேர காலக்கெடு நிர்ணயித்ததால், அதன் பின் ஓய்வு பெற்றவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதய அரசு அனைவருக்கும் மருத்துவ நிதி உதவி கிடைக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார்.


