அரசு பணியாளர்கள் கரூரில் ஆர்ப்பாட்டம்
அரசு பணியாளர்கள் கரூரில் ஆர்ப்பாட்டம்
அரசு பணியாளர்கள் கரூரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 12, 2011 01:20 AM
கரூர்: பல்வேறு கோரிக்கைளை வலியூறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஆண்டியப்பன் தலைமையில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் 'மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கு விரோதமாக உள்ள புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்ற கூடாது' உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பபட்டது. நிகழ்ச்சியில் அரசு கல்லூரி ஆய்வக உதவியாளர் சங்க மாநில தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர்கள் கருப்பன், மலையாளன், டாஸ்மாக் பணியாளர்கள் சங்க துணை பொது செயலாளர் பழனிபாரதி, உள்ளாட்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


