ஓணம் பண்டிகைக்கு வரவேற்பு: மூணாறில் பூந்தோட்டம் தயார்
ஓணம் பண்டிகைக்கு வரவேற்பு: மூணாறில் பூந்தோட்டம் தயார்
ஓணம் பண்டிகைக்கு வரவேற்பு: மூணாறில் பூந்தோட்டம் தயார்
ADDED : ஆக 14, 2011 07:05 PM
மூணாறு:மூணாறில் ஓணம் பண்டிகைக்காக வன வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான பூந்தோட்டம் தயாராகி வருகிறது.மாட்டுப்பட்டி அணைக்கு செல்லும் ரோட்டில் கேரள வன வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான பூந்தோட்டம் உள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700க்கும் அதிகமான வகை பூக்கள் உள்ளன. ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்ட ரோஜா வகையைச் சேர்ந்த 'நிமீசியா' பூக்கள் வைலட் மற்றும் லைட்ரோஸ் நிறங்களில் பூத்து பூந்தோட்டத்திற்கு அழகு சேர்க்கிறது. தற்போது மழை காலம் என்பதால் பெரும்பாலான பூக்கள் பூக்கவில்லை. இருந்தாலும், கேர்ட்டிலியா, சிம்பீடியம், ஆந்தோரியம்,'டீ ரோஸ்' என அழைக்கப்படும் கமலியா, கூஸ்மானியா போன்ற பூக்கள் பல்வேறு நிறங்களில் பூத்துள்ளன.இலை வடிவில் காணப்படும் 'ஆந்தோரியம்' பூக்கள் சிவப்பு, வெள்ளை, வைலட் என பல நிறங்களில் பூத்துக்குலுங்குகின்றன. விரைவில் ஓணப்பண்டிகைக்கான சுற்றுலா சீசன் துவங்க உள்ளதால்,வனத்துறையினர் பூந்தோட்டத்தை தயாராக்கி வருகின்றனர்.