ADDED : செப் 04, 2011 11:29 PM
திண்டிவனம் : திண்டிவனம் சிவசக்தி விநாயகருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.
திண்டிவனம் நாகலாபுரம் ஓம் சிவசக்தி விநாயகர் பரிவர்த்தன கோவிலில் 32ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. கடந்த 1 ம் தேதி சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் சந்தன காப்பு நடந் தது. அன்னை அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன் உடன் விநாயகப் பெருமான் வீதி யுலா நடந்தது. மறுநாள் விபூதி காப்பு, 3 ம் தேதி சிவசக்தி மற்றும் முருகனுடன் விநாயகருக்கு மலர் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. விழா ஏற்பாடுகளை டாக்டர் மல்லிகார்ச்சுணன் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


