/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மேடை நாடகம் அழியாது: ஒய்.ஜி.மகேந்திரன்மேடை நாடகம் அழியாது: ஒய்.ஜி.மகேந்திரன்
மேடை நாடகம் அழியாது: ஒய்.ஜி.மகேந்திரன்
மேடை நாடகம் அழியாது: ஒய்.ஜி.மகேந்திரன்
மேடை நாடகம் அழியாது: ஒய்.ஜி.மகேந்திரன்
ADDED : செப் 04, 2011 11:34 PM
கோவை : ''எத்தனை நவீன பொழுது போக்கு அம் சங்கள் வந்தாலும் மேடை நாடகங்களை
அழிக்க முடியாது,'' என்று பிரபல நாடக இயக்குனர் ஒய்.ஜி.மகேந்திரன்
பேசினார்.சசி படைப்பாற்றல் மேலாண்மை கல்லூரியின் சார்பில் முதலாமாண்டு
நிறைவு விழா, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. இதில் அண்ணா
பல்கலைத் தேர்வில் முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு
பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரங்களை கல்லூரி அறங்காவளர் ராஜ்தீபன்
சுவாமிநாதன், மற்றும் ஓய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் வழங்கினர். விழாவை
முன்னிட்டு, ஓய்.ஜி. மகேந்திரன் குழுவினரின் 'நாடகம்' என்ற நாடகம்
நடந்தது. ஒய்.ஜி. மகேந்திரன் பேசுகையில், ''சினிமா, தொலைக்காட்சி,
இன்டர்நெட் என்று இன்னும் எத்தனை நவீன பொழுது போக்கு நிகழ்ச்சிகள்
வந்தாலும் மேடை நாடகங்களை அழிக்க முடியாது. காரணம், மேலே சொன்ன
அத்தனைக்கும் தாயாக இருக்கும் கலை மேடை நாடகம்தான்.
''தொழில் நுட்ப வளர்ச்சியில் உருவாக்கப்படும் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல்
வித்தைகளை காட்டி மக்களை நிண்ட நாளைக்கு மயக்க முடியாது. மேடை நாடகங்களை
பார்த்து ரசிப்பவர்கள், ஏராளமானவர்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை
இன்னும் அதிகமாகும், அப்போது மேடை நாடகம் புதிய பரிணாமத்தை அடையும்,''
என்றார்.


