Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பசுமை தொலை தொடர்பு குறித்து பொறியியல் கல்லூரியில் விவாதம்

பசுமை தொலை தொடர்பு குறித்து பொறியியல் கல்லூரியில் விவாதம்

பசுமை தொலை தொடர்பு குறித்து பொறியியல் கல்லூரியில் விவாதம்

பசுமை தொலை தொடர்பு குறித்து பொறியியல் கல்லூரியில் விவாதம்

ADDED : அக் 11, 2011 02:34 AM


Google News

புதுச்சேரி : புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் நேற்று 'பசுமை தொலைத் தொடர்பு' என்ற தலைப்பில் கூட்டுக்குழு விவாதம் நடந்தது.

கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்புதுறை சார்பில் நடந்த கருத்தரங்கில், துறைத் தலைவர் சீனுவாசன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் பிருதிவிராஜ் தலைமை தாங்கி விவாதத்தைத் துவக்கி வைத்தார். கல்லூரியின் இணை பேராசிரியை ஜெயந்தி அறிமுக உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியையொட்டி மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு துறை சார்பில் சிறப்பு செய்தி மலரை கல்லூரி முதல்வர் வெளியிட்டார். தொடர்ந்து 'பசுமை தொலைத் தொடர்பு' என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் சென்னை விப்ரோ கம்பெனியின் அதிகாரி நரசிம்மன், புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., உதவி பொது மேலாளர் ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆரோவில் ஐ.சி.ஐ.டி.ஐ., ஒருங்கிணைப்பாளர் அவதானுலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விவாத்தில் கலந்து கொண்டவர்கள் பசுமைத்தொலைத்தொடர்பு மூலம் 'எதிர்பார்க்கும் சேவையை அளிப்பது, பல வலையமைப்புகளில் (நெட்) இருந்து வரும் தகவல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து சேதம் ஏற்படாமல் தடுப்பது, கதிர்வீச்சை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது, வானொலி அலைவரிசை வலையமைப்புகளில் ஆற்றல் சக்தியின் வினைத்திறனை அதிகரிப்பது, வளங்களின் வினைத்திறனை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக பேசினர். கல்லூரி துணை பேராசிரியர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us