ADDED : ஜூலை 23, 2011 04:21 PM

சில வாரங்களுக்கு முன் வேலூர் அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்தது.
இதில் அவசர கால கதவுகள் எதுவும் இல்லாததால் தப்பிக்க இயலாமல் பலர் கருகி இறந்தனர். இதை தொடர்ந்து பல ஆம்னி பஸ்கள் விபத்திற்கு உள்ளாகின. சொகுசு மட்டுமே குறிக்கோளாக கொண்டும், அதற்கேற்ப வசூலையும் செய்து வரும் ஆம்னி பஸ்களில் அவசர காலத்திற்கு தப்பிக்க வழியே இல்லை. தன்னை நாடி வரும் பயணிகளின் உயிரையும் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்ப்பது ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கடமை. ஆனால், ஆபத்து நேர்ந்து பல உயிர்கள் பலியான பின்பும் ஆம்னிகளில் மாற்றம் வரவில்லை. பல பஸ்கள் இன்னமும் அவசர காலங்களில் உதவாத நிலையில் இயக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இதை ஏற்படுத்த அரசு அவசரப்படுத்த வேண்டும்.


