/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ரப்பர் இறக்குமதிக்கு அரசு அனுமதிகுமரி ரப்பர் விவசாயிகள் அதிருப்திரப்பர் இறக்குமதிக்கு அரசு அனுமதிகுமரி ரப்பர் விவசாயிகள் அதிருப்தி
ரப்பர் இறக்குமதிக்கு அரசு அனுமதிகுமரி ரப்பர் விவசாயிகள் அதிருப்தி
ரப்பர் இறக்குமதிக்கு அரசு அனுமதிகுமரி ரப்பர் விவசாயிகள் அதிருப்தி
ரப்பர் இறக்குமதிக்கு அரசு அனுமதிகுமரி ரப்பர் விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூலை 23, 2011 03:30 AM
திற்பரப்பு:ரப்பர் இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால் குமரி
மாவட்ட ரப்பர் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். ரப்பரின் தேவை அதிகரித்ததை
தொடர்ந்து ரப்பருக்கு அதிகவிலை கிடைக்க துவங்கியது. இதனால் ரப்பர்
விவசாயம் அதிக லாபத்தை கொடுக்கிறது என்ற காரணத்தால் மாவட்டத்தின்
பெரும்பாலான பகுதிகளில் ரப்பர் விவசாயம் செய்ய துவங்கியுள்ளனர்.வாழை,
தென்னை போன்ற பயிர்களை அழித்து அப்பகுதிகளில் ரப்பர் பயிரிடுவதை சாதாரணமாக
காணமுடிகிறது. மேலும் வயல் வெளிகளை கூட ரப்பர் தோட்டங்களாக மாற்றியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வரும் ரப்பரின் விலை காரணமாக மக்கள் இவ்வாறு
செய்து வருகின்றனர்.ரப்பர் மாவட்டம் முழுவதும் பரவுவது சுகாதாரக்கேடுகளை
உருவாக்கும் என்றும், மூச்சு திணறல் போன்ற நோய்களை ஏற்படுத்த ரப்பர் மிக
முக்கிய காரணமாகிறது என்றும் சமூக ஆர்வலர்களும், மருத்துவர்கள்
கூறிவருகின்றனர்.
பொருளாதார ஏற்றத்தை காரணம் காட்டி மாவட்ட மக்கள் ரப்பரின்
பின் செல்கின்றனர்.ரப்பரால் அதிக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்து
விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்
மத்திய அரசு ரப்பர் இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய செய்தி பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7.5 சதவீதம் இறக்குமதி வரியுடன் வரும் 9
மாதங்களுக்குள் 40 ஆயிரம் டன் ரப்பர் இறக்குமதி செய்ய அரசு அனுமதி
வழங்கியுள்ளது.கிலோ ஒன்றுக்கு இருபது ரூபாய் அல்லது விலையின் 20 சதவீதம்
என்ற கணக்கை மாற்றி அமைத்து தான் தற்போது 7.5 சதவீத வரியை
கொண்டுவந்துள்ளனர். டயர் கம்பெனிகளின் கோரிக்கையை ஏற்று தான் அரசு தற்போதைய
முடிவு எடுத்துள்ளது என தெரிகிறது.தற்போது அரசு அனுமதித்துள்ள 40 ஆயிரம்
டன் என்பது இந்தியாவில் ஒரு மாதம் தேவைப்படும் ரப்பரின் பாதி அளவு தான்
என்றாலும், ரப்பர் விலையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரப்பர் இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய தகவல் வந்ததும் ஆன்லைன் வர்த்தகத்தில்
ரப்பரின் விலை ஒரே இரவில் 5 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது.சாதாரண
ரப்பர் வியாபாரிகளும் விவசாயிகளிடம் இருந்து ரப்பர் மார்க்கெட் விலைப்படி
ரப்பர் ஷீட் எடுக்க தயங்குகின்றனர். இதனால் ரப்பரின் விலை குறைய
வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். தொடர்ந்து மத்திய அரசு இதே
வரியுடன் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டால் குமரி மாவட்ட ரப்பர்
விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.தற்போது இந்தியாவில் உள்ள
ரப்பரின் விலையை விட குறைவாகவே சர்வதேச விலை உள்ளது என்பதால் இறக்குமதி
செய்யும் ரப்பர் லாபமாக கிடைக்க வாய்ப்புள்ளதால் ரப்பர் தேவைப்படும்
கம்பெனிகள் இறக்குமதியில் அதிகம் விருப்பம் தெரிவிக்கிறது. ரப்பர்
விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு ரப்பர் இறக்குமதி விஷயத்தில் நல்ல
முடிவு எடுக்க வேண்டும் என்பதே குமரி மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக
உள்ளது.


