மீனவர்களை கொலை செய்த வழக்கு: மேலும் இருவர் கோர்ட்டில் சரண்
மீனவர்களை கொலை செய்த வழக்கு: மேலும் இருவர் கோர்ட்டில் சரண்
மீனவர்களை கொலை செய்த வழக்கு: மேலும் இருவர் கோர்ட்டில் சரண்
ADDED : ஆக 24, 2011 10:07 PM

சென்னை : மீனவரை கடத்தி கொலை செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் சாமியின் தம்பிகளைத் தொடர்ந்து, மேலும் இருவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை, 53.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், காணவில்லை என தேடப்பட்டு வந்த அவர், முன்னாள் அமைச்சர் சாமியின் தம்பிகளால், புதுச்சேரிக்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து டைசன், சுந்தரம் இருவரையும் கைது செய்தனர். தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் தம்பிகள், சங்கர், சொக்கலிங்கம் இருவரும், நேற்று முன்தினம் திழுக்கழுங்குன்றம் கோர்ட்டில் சரணடைந்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேடப்பட்டு வந்த குமார், வைத்திலிங்கம் இருவரும் நேற்று திருவொற்றியூர் கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரையும், 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில், மொத்தம் ஆறு பேர் சிக்கியுள்ளனர்.


