மாணவன் கொலை: மாஜி ராணுவ அதிகாரி ஜாமின் மனு தள்ளுபடி
மாணவன் கொலை: மாஜி ராணுவ அதிகாரி ஜாமின் மனு தள்ளுபடி
மாணவன் கொலை: மாஜி ராணுவ அதிகாரி ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஆக 03, 2011 01:41 AM
சென்னை: சென்னை, தீவுத்திடல் அருகேயுள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில், பாதாம் கொட்டை பறிக்கச் சென்ற சிறுவன் தில்சன், கடந்த 3ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த வழக்கில், முன்னாள் ராணுவ அதிகாரி ராமராஜை, போலீசார் கைது செய்தனர். ஜாமின் கோரி, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், ராமராஜ் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி தேவதாஸ் விசாரித்தார். ஜாமின் வழங்க நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன் எதிர்ப்பு தெரிவித்தார். ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.


