சுத்திகரிப்பு நிலைய தொழிற்நுட்ப குழு புது முயற்சி: சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் தகவல்
சுத்திகரிப்பு நிலைய தொழிற்நுட்ப குழு புது முயற்சி: சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் தகவல்
சுத்திகரிப்பு நிலைய தொழிற்நுட்ப குழு புது முயற்சி: சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் தகவல்
திருப்பூர்: சாயக்கழிவு நீர் சுத்திகரிப்புக்கு ஏற்ற தொழிற்நுட்பத்தை கண்டறிவது தொடர்பாக, பொது சுத்திகரிப்பு நிலையங்களின் தொழிற்நுட்ப வல்லுனர் குழு, கலந்தாய்வு நடத்தி வருகிறது.
திருப்பூர் சாயப் பிரச்னையில் தீர்வு ஏற்படுத்த வழிகாட்டியுள்ள தமிழக அரசு, 'பிரெய்ன் சொல்யூஷன்' மற்றும் 'நானோ பில்ட்ரேஷன்' என இரண்டு தொழிற்நுட்பங்களில் சரியானதை தேர்வு செய்ய ஆலோசனை வழங்கியுள்ளது.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன் கூறியதாவது: ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு நிலையங்களிலும், சுத்திகரிப்பு தொழிற்நுட்ப நிபுணர்கள் பணியில் உள்ளனர். சுத்திகரிப்பு பணியை மேற்கொள்வதில், பலதரப்பட்ட இடையூறுகள் ஏற்பட்டன. எனவே, பொதுவான சுத்திகரிப்பு பிரச்னையை கண்டறிந்து சரி செய்யும் வகையில், தொழிற்நுட்ப குழுவினர் கலந்தாய்வு நடத்த ஆலோசிக்கப்பட்டது. அனைத்து நிபுணர்களும் ஆலோசித்து, சுத்திகரிப்பின் போது ஏற்படும் இடர்பாடுகள், கோளாறுகளை பதிவு செய்வர். குறைபாடுகளை சரி செய்ய, சிறந்த தொழிற்நுட்பத்தை கண்டறிவர். குறிப்பாக, திருப்பூர் பின்னலாடை துணிக்கு சாயமிடுவதன் மூலமாக ஏற்படும் கழிவுநீரை, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழிற்நுட்பத்தில் சுத்திகரிக்க செய்வதற்கான சிறந்த தொழிற்நுட்பத்தை தேர்வு செய்ய உள்ளனர். பிரச்னை குறித்து ஆராய்ந்து அறிக்கை தயாரித்து, மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, நாகராஜன் கூறினார்.