/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சதுர்த்தி விழா பாதுகாப்புக்கு பத்தாயிரம் போலீசார்சதுர்த்தி விழா பாதுகாப்புக்கு பத்தாயிரம் போலீசார்
சதுர்த்தி விழா பாதுகாப்புக்கு பத்தாயிரம் போலீசார்
சதுர்த்தி விழா பாதுகாப்புக்கு பத்தாயிரம் போலீசார்
சதுர்த்தி விழா பாதுகாப்புக்கு பத்தாயிரம் போலீசார்
ADDED : ஆக 20, 2011 11:29 PM
கோவை:'விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, மேற்கு மண்டலத்தில் பத்தாயிரம்
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்' என, மேற்கு மண்டல போலீஸ்
ஐ.ஜி., வன்னியபெருமாள் தெரிவித்தார்.குற்றத்தடுப்பு நடவடிக்கை, விநாயகர்
சதுர்த்தி பாதுகாப்பு, லாரி ஸ்டிரைக் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு
அளிப்பதற்கான ஆலோசனை கூட்டம், ரேஸ்கோர்சில் உள்ள மேற்கு மண்டல போலீஸ்
ஐ.ஜி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.,
பாலநாகதேவி, கோவை எஸ்.பி., உமா, ஈரோடு எஸ்.பி., ஜெயசந்திரன், ஊட்டி
எஸ்.பி., நிஜாமுதீன் உள்ளிட்ட மேற்கு மண்டலத்துக்குட்பட்ட எட்டு மாவட்ட
எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.
ஐ.ஜி., வன்னியபெருமாள் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி விழா, வரும் செப்.,
1ல் கொண்டாடப்படுகிறது. கோவையில் பல்வேறு இடங்களில் ஏராளமான விநாயகர்
சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இந்த சிலைகள் செப்.,3 மற்றும் 4ம்
தேதிகளில், நகர் மற்றும் புறநகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு
குளங்களில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பத்தாயிரம் போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேற்கு மண்டலத்தில் விசர்ஜன ஊர்வலம்
செல்லும் பகுதிகளில் 11 இடங்கள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன;
கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். சிலைகள் 5 அடிக்குள் இருக்க
வேண்டும்; கெமிக்கல் இல்லாத சிலைகள் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்.
இவற்றை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.தற்போது அரிசி கடத்தல்
தடுக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் 853 கோடி ரூபாய் மோசடி
நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 165 கோடி ரூபாய் மதிப்பிலான
நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன; 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆதாயக் கொலை
வழக்கில் 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். செயின் பறிப்பு,
திருட்டு உள்ளிட்டவற்றை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக தினமும் மாலை 5.00 முதல் இரவு 9.00 மணி வரை போலீஸ் அதிகாரிகள்
தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும். இவ்வாறு, ஐ.ஜி.,
கூறினார்.


