தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் விநியோகம் செய்ய மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் விநியோகம் செய்ய மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் விநியோகம் செய்ய மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

இவ்வாறு செய்வதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்படுமெனக்கூறி, தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினர், தூத்துக்குடியில் ஆக.,19ல் போராட்டம் நடத்தினர். 15 நாட்களுக்கு இரண்டு மோட்டர்களுக்கு பதிலாக ஒரு மோட்டாரை மட்டுமே இயக்கி, தண்ணீர் எடுக்கப்படுமென அரசு அதிகாரிகள் அப்போது உறுதியளித்தனர்.
இந்நிலையில், நேற்று மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயலர் கனகராஜ் மற்றும் கட்சியினர் இந்த நீரேற்று நிலையத்திற்கு சென்றனர். அப்போது, இரண்டு மோட்டார்களும் இயங்கின. பணியாளர்களிடம் கேட்டதற்கு, 'நேற்று முன்தினம் முதல் தான் இரு மோட்டார்களும் இயக்கப்படுவதாக,' தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில்,''ஒப்பந்தத்தை மீறி இரண்டு மோட்டார்களும் இயக்கப்பட்டு, தொழிற்சாலைகளுக்காக அதிகளவு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதுகுறித்து, சட்டசபையில் நாங்கள் குரல் எழுப்புவோம். இதுதொடர்ந்தால் விவசாயிகளை திரட்டி, போராட்டம் நடத்துவோம். முன்பு போல, தாமிரபரணியின் வடகாலில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும், அல்லது கடல்நீரை குடிநீராக்கி, அதை தொழிற்சாலைகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


