Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சபரிமலை அய்யப்பன் கோவில் தரிசனம் ஆன் - லைனில் பதிவு செய்ய புதிய வசதி

சபரிமலை அய்யப்பன் கோவில் தரிசனம் ஆன் - லைனில் பதிவு செய்ய புதிய வசதி

சபரிமலை அய்யப்பன் கோவில் தரிசனம் ஆன் - லைனில் பதிவு செய்ய புதிய வசதி

சபரிமலை அய்யப்பன் கோவில் தரிசனம் ஆன் - லைனில் பதிவு செய்ய புதிய வசதி

UPDATED : ஆக 07, 2011 02:42 AMADDED : ஆக 07, 2011 12:43 AM


Google News
Latest Tamil News

சபரிமலை : பக்தர்கள், எளிதாக சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆன் - லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

இதற்கான பணிகளில், கேரள போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் சபரிமலையில் பக்தர்களின் நெரிசலை குறைக்க முடியும் என, நம்பப்படுகிறது. கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில், உலக பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மண்டல, மகரஜோதி உற்சவங்களின் போது, கோடிக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம். ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் தரிசனம் செய்ய இயலாத நிலை நீடித்து வருகிறது. இதில், சில நாட்களில் சுவாமி தரிசனத்திற்கு, நாட்கணக்கில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. உற்சவ காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்த்து பக்தர்கள் விரைவாகவும், எளிதாகவும் சுவாமி தரிசனம் செய்ய, கேரள மாநில போலீசார் தற்போது ஆன் - லைன் புக்கிங் வசதி குறித்து, தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.



ஆன் - லைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்களில், ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும், ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்து திரும்ப, ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், விரைவாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வசதி கிடைக்கும். இது சம்பந்தமான பேச்சுவார்த்தை, ஏற்கனவே திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் கேரள மாநில போலீஸ் அதிகாரிகள் இடையே நடந்து முடிந்துள்ளது. இவ்வசதிக்காக ஏற்கனவே செயல்பட்டு வரும், கேரள போலீசாரின் வலை தளத்தின் வழியே, பக்தர்கள் ஆன் - லைன் மூலம், தங்களது வருகை குறித்து பதிவு செய்ய, தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக, sabarimala.keralapolice.gov.in என்ற வலைதளம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த வலைதளம் வழியாக தான், பக்தர்களுக்கு ஆன் - லைன் முன்பதிவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.



ஏற்கனவே இவ்வலைதளம் வழியாக, சபரிமலையில் அவ்வப்போதைய நெரிசல், பருவ நிலை, வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் வசதி போன்ற பல்வேறு தகவல்களை, பக்தர்கள் பெற்று வருகின்றனர். தற்போது அதே வலைதளத்தில் தான், ஆன் - லைன் வசதியும் செய்யப்பட உள்ளது. இவ்வலைதளம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், சபரிமலையில் உற்சவ காலங்களில், பக்தர்களின் நெரிசலை பெருமளவு குறைக்க முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us