நீலகிரி கிராமத்தில் "தெவ்வப்பா' பண்டிகை : 25 பைசா செலுத்தி சிறப்பு வழிபாடு
நீலகிரி கிராமத்தில் "தெவ்வப்பா' பண்டிகை : 25 பைசா செலுத்தி சிறப்பு வழிபாடு
நீலகிரி கிராமத்தில் "தெவ்வப்பா' பண்டிகை : 25 பைசா செலுத்தி சிறப்பு வழிபாடு
ADDED : ஜூலை 27, 2011 08:45 PM
மஞ்சூர்: மஞ்சூர் அருகே 14 ஊர் கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய, 'தெவ்வப்பா திருவிழா'வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் 14 படுகரின கிராமங்கள் உள்ளன. ஆண்டு தோறும் இப்பகுதி மக்களால், 'தெவ்வப்பா திருவிழா' கொண்டாடப்படுகிறது. திருவிழாவையொட்டி, நேற்று இரவு 8.30 மணிக்கு வன கோவிலிலிருந்து ஹெத்தையம்மனை அழைத்து 'காடெஎத்தை' கோவிலுக்கு சென்று, சிறப்பு பூஜை செய்தனர். பின் 14 ஊர் கிராம தலைவர்கள் இரவு முழுவதும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். நேற்று காலை 10.15 மணியளவில் திரளான பக்தர்கள் புடைசூழ காடெஎத்தை கோவிலிலிருந்து ஹெத்தை அம்மனை வனக்கோவிலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, கிராம மக்கள் நீண்ட வரிசையில் நின்று 25 பைசா காணிக்கை செலுத்தி, அம்மனை வழிபட்டனர். பகல் 2 மணியளவில் மீண்டும் ஹெத்தை அம்மனை காடெஎத்தை கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. புதியதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்களை வழிபடும் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சிறப்பு பூஜை செய்தனர்.