குறைந்த மின்அழுத்தம் பிரச்னைக்கு நடவடிக்கை
குறைந்த மின்அழுத்தம் பிரச்னைக்கு நடவடிக்கை
குறைந்த மின்அழுத்தம் பிரச்னைக்கு நடவடிக்கை

சென்னை : ''தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் குறைந்த மின் அழுத்தம் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
தொடர்ந்து துணை கேள்வியாக இந்திய கம்யூ., உறுப்பினர் குணசேகரன், பா.ம.க., உறுப்பினர் கணேஷ்குமார், அ.தி.மு.க., உறுப்பினர் மலரவன் ஆகியோர் குறைந்த மின்அழுத்த பிரச்னை, துணை மின்நிலையம் அமைக்கப்படுவது குறித்த கேள்விகளை எழுப்பினர்.
மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்து பேசும்போது, ''திருமங்கலம் தொகுதி, பேரையூரில் புதியதாக ஒரு 33/11 கி.வோட் துணை மின் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த துணை மின்நிலையம் அமைக்கத் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. துணை மின்நிலையம் நிறுவுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை நகர் மட்டுமல்லாமல், சென்னை உட்பட தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் குறைந்த மின்அழுத்தம், துணை மின்நிலையம் அமைக்கும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.