/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் "புத்தகத் திருவிழா' துவக்கம்மதுரையில் "புத்தகத் திருவிழா' துவக்கம்
மதுரையில் "புத்தகத் திருவிழா' துவக்கம்
மதுரையில் "புத்தகத் திருவிழா' துவக்கம்
மதுரையில் "புத்தகத் திருவிழா' துவக்கம்
ADDED : செப் 03, 2011 02:57 AM
மதுரை : தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆறாவது 'புத்தகத் திருவிழா' துவங்கியது.
மாணவர்களுக்கு 15, மற்றவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தலைமை வகித்தார். 'பபாசி' தலைவர் சொக்கலிங்கம் வரவேற்றார். அவர் பேசியதாவது: மொத்தம் 196 அரங்குகளில் 1 லட்சம் தலைப்பில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டைகளை காண்பித்தால் 15, மற்றவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. செப்.,5 ல் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடக்கின்றன என்றார்.கலெக்டர் சகாயம் கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது: கடந்த ஆண்டை விட, இம்முறை அதிக புத்தகங்கள் விற்பனையாகும். சுயமுன்னேற்றம், ஜோதிட புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. இது தமிழர்கள் வாசிக்கத் துவங்கியதை காட்டுகிறது. கிராமப்புற மாணவர்களை அதிகம் அழைத்துவர வேண்டும். தமிழாசிரியர்கள் கூட தமிழில் கையெழுத்திடாத தாழ்வு மனப்பான்மை நிலவுகிறது. ஆங்கிலம் தேவை; மோகம் கூடாது என்றார். 'தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன், பேராசிரியர் தமிழண்ணல் பேசினர். 'பபாசி' செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.செப்.,11 வரை தினமும் பகல் 11 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி, மாலை 5.30 க்கு கருத்தரங்கு, கலை நிகழ்ச்சி நடக்கிறது. அனுமதி இலவசம்.


