2-ஜி வழக்கு: விசாரணைக்கு ஆஜராக தயார்: அருண்ஷோரி
2-ஜி வழக்கு: விசாரணைக்கு ஆஜராக தயார்: அருண்ஷோரி
2-ஜி வழக்கு: விசாரணைக்கு ஆஜராக தயார்: அருண்ஷோரி
ADDED : செப் 05, 2011 12:10 PM
ஊட்டி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக எந்த விசாரணைக்கு, எப்போது வேண்டுமானாலும் ஆஜராக தயார் என பா.ஜ.
முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி தெரிவித்தார். 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டில்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை சுப்ரீம் கோர்ட் நேரடியாக கண்காணித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கவே இரண்டு குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட மாஜி அமைச்சர் ராஜா, எம்.பி. கனமொழி உள்ளிட்டோர் யாருக்கும் ஜாமின் கிடைக்கவில்லை. இந்நிலையில் மூன்றாவது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் முந்தை பா.ஜ. ஆட்சியின்போது பதவி வகித்த தொலை தொடர்பு அமைச்சர்களும் சிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி வந்திருந்த மாஜி மத்திய அமைச்சர் அருண்ஷோரி நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக எந்த நேரமும், எப்போது வேண்டுமானாலும் நேரில் ஆஜராக தயார் என தெரிவித்தார்.


