/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கான்ட்ராக்ட் மாற்றம்: ரேஷன் பொருட்கள் சப்ளை தாமதம்கான்ட்ராக்ட் மாற்றம்: ரேஷன் பொருட்கள் சப்ளை தாமதம்
கான்ட்ராக்ட் மாற்றம்: ரேஷன் பொருட்கள் சப்ளை தாமதம்
கான்ட்ராக்ட் மாற்றம்: ரேஷன் பொருட்கள் சப்ளை தாமதம்
கான்ட்ராக்ட் மாற்றம்: ரேஷன் பொருட்கள் சப்ளை தாமதம்
ADDED : ஆக 06, 2011 09:45 PM
ராமநாதபுரம்:ஒப்பந்ததாரர் மாற்றம் காரணமாக இந்த மாதம் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியிலிருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்புவது தாமதமாகி வருகிறது.கடந்த மாதம் விற்பனையான பொருட்களின் அளவை வைத்து அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியிலிருந்து ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும். இவை கொண்டு செல்லும் ஒப்பந்தம் ஆளுங்கட்சியினருக்கு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தூத்துக்குடியை சேர்ந்த தி.மு.க., முக்கிய புள்ளி ஒருவர் கான்ட்ராக்ட் எடுத்திருந்தார்.
தற்போது அவர் சார்பில் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்வதை நிறுத்தவும், புதிய கான்ட்ராக்டர் மூலம் கடைகளுக்கு வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. லாரிகள் தேவையான அளவு இல்லாததால், அவற்றின் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழங்கல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வழக்கமாக மாதம் தொடங்குவதற்கு முன்பே பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு விடும். இந்த மாதம் அரிசியை தவிர எந்த பொருட்களும் அனுப்பப்படவில்லை. அதனால் பொருட்கள் வழங்க 10ம் தேதிக்கு மேல் ஆகும், என்றார்.


