/உள்ளூர் செய்திகள்/சேலம்/வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் கார்டு கேட்டு முற்றுகைவட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் கார்டு கேட்டு முற்றுகை
வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் கார்டு கேட்டு முற்றுகை
வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் கார்டு கேட்டு முற்றுகை
வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் கார்டு கேட்டு முற்றுகை
ADDED : ஜூலை 13, 2011 03:22 AM
சேலம்: சேலம், வட்ட வழங்கல் அலுவலகத்தில், நேற்று, 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேஷன்கார்டு கேட்டு முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், இடமாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ரேஷன் கார்டு கேட்டு, 1,000க்கும் மேற்பட்டவர்கள் நேற்று, சேலம் வட்ட வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ரேஷன் கார்டு கேட்டு, ஓராண்டுக்கு முன் விண்ணப்பித்தவர்களுக்கு, இதுவரை கார்டு வழங்காமல், அதிகாரிகள் அலைகழித்து வந்தனர். அதனால், ஒப்புகை சீட்டுடன், வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.ஒரே நாளில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டதால், அதிகாரிகள் பணி செய்ய இயலாமல் திணறினர். ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் கொண்டு வந்த ஒப்புகை சீட்டை, அதிகாரிகள் கண்டு கொள்ளாமல், அடுத்த வாரம் வந்து பார்க்கும்படி திருப்பி அனுப்பினர்.அரசு விடுமுறை நாள் தவிர மற்ற நாட்களிலும், ரேஷன் கார்டு கேட்டு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இருப்பினும், பொதுமக்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து, விண்ணப்பங்களை கொடுத்து சென்றனர்.


