Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நிலநடுக்க பட்டியல் பகுதியில் சாலை அமைப்பதால் திடீர் சர்ச்சை

நிலநடுக்க பட்டியல் பகுதியில் சாலை அமைப்பதால் திடீர் சர்ச்சை

நிலநடுக்க பட்டியல் பகுதியில் சாலை அமைப்பதால் திடீர் சர்ச்சை

நிலநடுக்க பட்டியல் பகுதியில் சாலை அமைப்பதால் திடீர் சர்ச்சை

ADDED : அக் 05, 2011 10:32 PM


Google News
குன்னூர் : குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை இடையேயுள்ள கோழிக்கரை ஆதிவாசி கிராமத்திற்கு சாலை அமைக்கும் விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது; இப்பகுதி நிலநடுக்கப்பட்டியலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட பகுதியாக கோழிக்கரை ஆதிவாசி கிராமம் உள்ளது; சுமார் 30க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

இவர்கள் தங்களின் அன்றாட அலுவல்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்ல சுமார் ஒரு கி.மீ., தூரம் வனத்தின் இடையே நடந்து சென்று, முக்கிய சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இங்கு பாதை அமைக்க வனத்துறை அனுமதி மறுத்து வந்தது.

கடந்த 40 ஆண்டாக பாதை வசதி வேண்டி மனுப் போர் நடத்தி வந்த பர்லியார் ஊராட்சி நிர்வாகம், ஒரு வழியாக வனத்துறை அனுமதியை பெற்றது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் ரூபாய் செலவில் இங்கு மண் பாதை அமைக்க ஊராட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டு பணியும் துவங்கியது.

இருப்பினும், 'பாதை அமைக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்ட இடம் நிலச்சரிவு அபாயமுள்ள இடமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது,' என்ற சர்ச்சை திடீரென எழுந்துள்ளது.

இது குறித்து மாநில முதல்வருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து குன்னூர் ரேஞ்சர் பால்ராஜ் கூறுகையில், ''கோழிக்கரை ஆதிவாசி கிராமத்துக்கு பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என பர்லியார் ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி, வனத்துறை அனுமதிக்காக அனுப்பி வைத்தனர்.

ஆதிவாசிகள் சட்டம் 2005ன் படி, மக்கள் நலன் கருதி வனப்பகுதிக்குள் பாதை அமைக்க இரண்டரை ஏக்கர் அளவுக்கு அனுமதி வழங்க மாவட்ட வன அலுவலருக்கு உரிமையுண்டு. கோழிக்கரை பகுதியில் 315 மீட்டர் நீளம், 4 மீ., அகலத்துக்கு மட்டுமே பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், எவ்வித விதிமீறிலும் வனத்துறை சார்பில் இல்லை,'' என்றார்.

இந்நிலையில், இப்பகுதியை நீலகிரி மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, இந்த சர்ச்சைக்கு முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us