தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: பிரதீப் குமார்
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: பிரதீப் குமார்
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: பிரதீப் குமார்
UPDATED : ஜூலை 20, 2011 07:43 AM
ADDED : ஜூலை 19, 2011 02:23 PM
புதுடில்லி : காமன்வெல்த் தொடரில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ஊழல் தடுப்பு கமிஷனராக பதவியேற்றுள்ள பிரதீப் குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டிவிக்கு பேட்டியளித்துள்ள பிரதீப் குமார், ஊழல் அதிகாரிகள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. நேர்மையான அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படலாம். மத்திய ஊழல் தடுப்பு கமிஷனராக இருந்த தாமசை நீக்கிய சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சரியானது என்று கூறியுள்ளார். இதற்கிடையே பிரதீப் குமார் நியமனத்தை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை முன்னாள் மத்திய ஊழல் தடுப்பு கமிஷனர் தாமஸ், தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.


