Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நாமக்கலில் சாலை மறியல்

நாமக்கலில் சாலை மறியல்

நாமக்கலில் சாலை மறியல்

நாமக்கலில் சாலை மறியல்

ADDED : ஜூலை 12, 2011 11:25 AM


Google News

நாமக்கல்: சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி, நாமக்கலில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் கோட்டை சாலை 26வது வார்டு செல்லாண்டியம்மன் கோயில் தெருவில், சிமென்ட் சாலை அமைப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கற்கள் கொட்டப்பட்டன. இந்நிலையில், ஆறுமாதங்களாகியும் சாலை அமைக்கும் பணி துவங்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சாலை நாமக்கல் பிரபல ஆஞ்சநேயர் கோயில் செல்லும் முக்கிய சாலை என்பது குறிப்பிடத்தக்கது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us