Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு வக்கீல்களாக 15 பேர் நியமனம்

அரசு வக்கீல்களாக 15 பேர் நியமனம்

அரசு வக்கீல்களாக 15 பேர் நியமனம்

அரசு வக்கீல்களாக 15 பேர் நியமனம்

ADDED : ஜூலை 13, 2011 10:43 PM


Google News
கோவை : அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து இரண்டு மாதத்துக்குப்பின், கோவை கோர்ட்களுக்கு அரசு வக்கீல்களாக 15 பேர் நியமிக்கப்பட்டனர்.கோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் நியமன உத்தரவு நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தது.

இதன்படி, மாவட்ட அரசு வக்கீலாக நாகராஜன், அரசு பிளீடராக ஆறுமுகம், முதலாவது கூடுதல் அரசு வக்கீலாக நாகராஜ், சிறப்பு கோர்ட் கூடுதல் அரசு வக்கீலாக அமலநாதன், கூடுதல் அரசு பிளீடராக கோவிந்தராஜ், எஸ்.சி., எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட்டுக்கு முருகன், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் ஈ.சி.,கோர்ட்க்கு சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வக்கீலாக இளங்கோவன், மகிளா கோர்ட்டுக்கு சரோஜினி, நிதிநிறுவன வழக்குகளை விசாரிக்கும் டான்பிட் கோர்ட் அரசு வக்கீல்களாக மாணிக்கராஜ் (சிவில்), கனகராஜ் (கிரிமினல்), முதலாவது விரைவு கோர்ட்டின் கூடுதல் அரசு வக்கீலாக அகஸ்டஸ், இரண்டாவது விரைவு கோர்ட்டுக்கு சிவகுமார், மூன்றாவது விரைவு கோர்ட்டுக்கு தாமோதரன் மற்றும் மனித உரிமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் கூடுதல் அரசு வக்கீலாக காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us