/உள்ளூர் செய்திகள்/வேலூர்/தீப்பெட்டி கம்பெனியில் தீ விபத்து: 10 பேர் காயம்தீப்பெட்டி கம்பெனியில் தீ விபத்து: 10 பேர் காயம்
தீப்பெட்டி கம்பெனியில் தீ விபத்து: 10 பேர் காயம்
தீப்பெட்டி கம்பெனியில் தீ விபத்து: 10 பேர் காயம்
தீப்பெட்டி கம்பெனியில் தீ விபத்து: 10 பேர் காயம்
ADDED : ஜூலை 14, 2011 12:01 AM
வேலூர்: குடியாத்தத்தில், தீப்பெட்டி கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில், 10
பேர் பலத்த காயம் அடைந்தனர்.
குடியாத்தம், அசோக் நகரில் ருக்மணி
தீப்பெட்டி கம்பெனியை துரைசாமி என்பவர் நடத்தி வந்தார். இங்கு, 320 பேர்
வேலை செய்தனர்.நேற்று மதியம் 2. 30 மணிக்கு, தீ குச்சிகள் செய்யும் பணி
வேகமாக நடந்தது. அப்போது, தீ குச்சி பண்டல்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீ
பிடித்தது. சிறிது நேரத்தில், அங்கிருந்த அனைத்து தீ குச்சிகள், குச்சிகள்
மீது தடவும் மருந்துகள் மற்றும் விற்பனைக்காக அனுப்ப வைத்திருந்த பண்டல்கள்
உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது. தீ குச்சி
பண்டல்களுக்கு நடுவே பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், வெளியே வர முடியாமல்
தவித்தனர். தகவல் அறிந்த குடியாத்தம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து
சென்று, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், பணியில் ஈடுபட்டிருந்த
அசோக் நகரைச் சேர்ந்த அம்பிகாபதி (40), வசந்தா (45), பாலம்மாள் (50), பேபி
(18), சரோஜா (48), மகாலட்சுமி (40), பாக்கியலட்சுமி (48), கவிதா (18),
பூங்காவனம் (24), குணசேகரன் (34) ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
தீக்காயம் அடைந்தவர்களில் அம்பிகாவதி, வசந்தா, பாலம்மாள், பேபி ஆகியோர்
வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அம்பிகாபதி,
வசந்தா ஆகியோருக்கு 100 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள்
கூறினர். மற்றவர்கள், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு
சேர்க்கப்பட்டுள்ளனர்.


