Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஓட்டல்களில் உணவு விலை "கிடுகிடு' :வாடிக்கையாளர்கள் அதிருப்தி

ஓட்டல்களில் உணவு விலை "கிடுகிடு' :வாடிக்கையாளர்கள் அதிருப்தி

ஓட்டல்களில் உணவு விலை "கிடுகிடு' :வாடிக்கையாளர்கள் அதிருப்தி

ஓட்டல்களில் உணவு விலை "கிடுகிடு' :வாடிக்கையாளர்கள் அதிருப்தி

ADDED : ஜூலை 14, 2011 09:37 PM


Google News
திருப்பூர் : திருப்பூரில் உள்ள ஓட்டல்கள் சிலவற்றில் உணவு வகைகளின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருப்பூரில் உள்ள பல ஓட்டல் களில், உணவு வகைகளின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது; உயர்தர சைவ ஓட்டல், நடுத்தர ஓட்டல் மற்றும் டிபன் சென்டர்கள், தள்ளுவண்டி கடைகளாக 'கையேந்தி பவன்'கள் செயல்படுகின்றன.

வெளியூர் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் நகரமாகவும், சுற்றுப்பகுதிகளில் இருந்து, தினமும் மாவட்ட தலைநகரான திருப்பூருக்கு வந்து செல்லும் கட்டாயத்திலும், பல நேரங்களில் பலரும் ஓட்டல்களில் சாப்பிடுகின்றனர்; திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும், தொழிலாளர்களும் ஓட்டல்களில் உணவருந்தும் நிலையே உள்ளது.எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஓட்டல்களில் அடிக்கடி விலை உயர்வு செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, இட்லி 12 ரூபாய்; ரோஸ்ட், ஊத்தப்பம், கோதுமை உப்புமா, பொங்கல், பூரி உள்ளிட்டவை 25 ரூபாயாக உள்ளது; வடை விலை 10 ரூபாய்; மசால் ரோஸ்ட், ஆனியன் ரோஸ்ட், ரவா ரோஸ்ட் விலை 35 ரூபாயாக உள்ளது. காபி விலை 10லிருந்து 12 ரூபாயாக உயர்ந்துள்ளது; சில ஓட்டல்களில் 15 ரூபாய். நடுத்தர வகை ஓட்டல்களில் மட்டுமே இவ்விலைகளில் 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மாற்றம் தெரிகிறது; மற்றபடி, பெரும்பாலான ஓட்டல்களில் இவ்விலையே காணப்படுகிறது; தயிருடன் முழு சாப்பாடு 45 ரூபாயாக உள்ளது; சில ஓட்டல் களில் தயிர் என தனியாக 6 ரூபாய் டோக்கன் பெற வேண்டும். புரோட்டா, சப்பாத்தி விலைகளும் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளன. சைவ ஓட்டல்களில் உள்ள விலைகளை விட, அசைவ ஓட்டல்களில் உள்ள விலை தாறுமாறாக எகிறி உள்ளது; மட்டன் பிரியாணி 85; சிக்கன் பிரியாணி 80 ரூபாய்; பிளைன் பிரியாணி 60 ரூபாய்; பொறித்த மீன் 85 ரூபாயாக உள்ளது; மற்ற ரகங்களின் விலை யிலும் உயர்வு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் அசைவ ரகங்களை 'விலை' காரணமாகவே, தவிர்த்து விடுகின்றனர். பசியை போக்க சைவ ஓட்டல்களை நாடும் பலரும், திடீர் விலை உயர்வால் சாப்பிட்ட பின், பில்லை பார்த்து அதிருப்தி அடைகின்றனர். சில ஓட்டல்களில் இட்லி, பூரி, பொங்கல், ரோஸ்ட், வடை உள்ளிட்ட உணவு பொருட்களின் அளவு மிக குறைந்துள்ளது. மதிய வேளைகளில், அன்றைய தினம் சந்தையில் மலிவான விலையில் உள்ள காய்கறிகள், கீரைகளே பொரியலாக, கூட்டாக, சாம்பாராக பரிமாறப்படுகிறது.யார் கேட்பது? ஓட்டல்களில் விலை பட்டியல் வைக்க வேண்டும் என்ற விதிமுறையை, 90 சதவீத ஓட்டல் நிர்வாகங்கள் கடைபிடிப்பது இல்லை. சில ஓட்டல்களில் உணவு வகைகளின் பெயர் பட்டியல் இருந்தாலும், விலை குறிப்பிடும் இடம் காலியாகவே காட்சியளிக்கிறது. சமையல் பொருட்களின் விலை உயர்வு, ஆட்களுக்கு சம்பளம், மின்சார செலவை, விலை உயர்வுக்கு காரணமாக ஓட்டல் நிர்வாகங்கள் கூறுகின்றன. மொத்த செலவையும் சாப்பிடும் வாடிக்கையாளர்களின் தலையில் கட்டிவிட்டு, லாபத்தை மட்டுமே கணிசமாக அதிகரிக்கும் வகையில், உணவு பொருட்களின் விலையை பலமடங்காக உயர்த்துவதில் எந்த நியாயமும் இல்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us