லார்ட்ஸ் டெஸ்ட்டில் 34 ரன்களில் அவுட்; 100வது சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார் சச்சின்
லார்ட்ஸ் டெஸ்ட்டில் 34 ரன்களில் அவுட்; 100வது சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார் சச்சின்
லார்ட்ஸ் டெஸ்ட்டில் 34 ரன்களில் அவுட்; 100வது சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார் சச்சின்
UPDATED : ஜூலை 23, 2011 08:18 PM
ADDED : ஜூலை 23, 2011 07:41 PM

லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் 34 ரன்களில் அவுட்டாகி 100வது சதமடிக்கும் வாய்ப்பை இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் நழுவ விட்டார்.
சச்சின் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 51 சதமும், ஒரு நாள் போட்டிகளில் 48 சதமும் அடித்திருக்கிறார். தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இவர் தமது 100வது சதத்தை அடிப்பார் என்று அவருடைய ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இருந்தனர். இதற்காக 200 கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 474 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்த போட்டியில் இங்கிலாந்தின் பீட்டர்சன் இரட்டை சதம் எடுத்து சாதனை படைத்தார். இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 3ம் நாள் ஆட்டம் துவங்கியது. இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 158 ரன்னை எட்டிய போது சச்சின் டெண்டுல்கர் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராடு பந்தில் சுவானிடம் கேட்ச் கொடுத்து 3வது விக்கெட்டாக அவுட்டானார்.


