ADDED : ஜூலை 25, 2011 12:04 AM
புதுச்சேரி : ஓவியம், நடனப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
சத்ய சாய் அகாடமி மற்றும் சேலஞ்சர் அகாடமி இணைந்து ஓவியம், நடனம் ஆகிய போட்டிகளை நடத்தின. போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாஸ் ஓட்டலில் நடந்தது. விழாவில் புதுச்சேரி போட்டோ மற்றும் வீடியோ சங்கத் தலைவர் ஸ்டார் பாபு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். சத்யசாய் அகடமி இயக்குனர் சிவக்குமார், சேலஞ்சர் அகடமி இயக்குனர் வெங்கடேசன், முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.