/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/காது கேளாத சிறார்களுக்கு பயிற்சி பள்ளி துவக்கம்காது கேளாத சிறார்களுக்கு பயிற்சி பள்ளி துவக்கம்
காது கேளாத சிறார்களுக்கு பயிற்சி பள்ளி துவக்கம்
காது கேளாத சிறார்களுக்கு பயிற்சி பள்ளி துவக்கம்
காது கேளாத சிறார்களுக்கு பயிற்சி பள்ளி துவக்கம்
ADDED : ஜூலை 27, 2011 02:29 AM
திண்டுக்கல்:திண்டுக்கல்- பழநி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், காதுகேளாத சிறார்களுக் கான பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில் ஒன்று முதல் மூன்று வயது, சிறுவர், சிறுமிகளுக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற்ற பலர், வழக்கமான மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.மாற்றுதிறனாளிகள் நல அதிகாரி மதிவாணன் கூறியது:வாய் பேசாதவர்களுக்கு மூன்று வயதிற்குள் பயிற்சி அளித்தால் தான், எளிதில் பேச முடியும். இந்த வயதை தாண்டி விட்டால், சைகையால் மட்டுமே விளக்க முடியும். இதற்காக 4,000 ரூபாயில், இயந்திரம் வழங்கப்படுகிறது. இதை காதில் பொருத்தி, இளம் சிறார்கள் பேசுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்கள் சைகை இல்லாமல், எளிதில் அனைத்து வார்த்தைகளையும் பேச முடியும். இதில் பயிற்சி பெற்ற ஒன்பது பேர், வழக்கமான பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த பயிற்சியில் குழந்தைகளுடன் பெற்றோரும் அனுமதிக்கப்படுகின்றனர். இப்பள்ளியை, காது கேளாத இளம் சிறார்கள் பயன்படுத்த வேண்டும், என்றார்