ADDED : ஆக 02, 2011 01:01 AM
திண்டிவனம் : திண்டிவனம் நம்மாழ்வார் சபை சார்பில் வைணவ மாநாடு நடந்தது.திண்டிவனம் லஷ்மி நரசிம்மர் கோவிலில் துவங்கிய பஜனை ஊர்வலம் சுலோச்சனா பங்காரு திருமண மண்டபத்தை சென்றடைந்தது.
ஆண்டாள் கோஷ்டியினர் திருமால் துதி பாடினர்.நிகழ்ச்சிக்கு சபை தலைவர் வேங்கடேச ராமனுஜதாசர் தலைமை தாங்கினார். செயலாளர் ரகுபதி வரவேற்றார். மூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். பக்தி சொற்பொழிவுகள், மாணவ, மாணவிகளின் கோலாட்டம், நடனம், வில்லுப்பாட்டு, வினாடி-வினா நிகழ்ச்சிகள் நடந்தது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவில் கோபால தேசிகாச்சாரியார், திருக்கோவிலூர் மடாதிபதி ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுச்சாரியார் ஆசி வழங்கினர். துணை தலைவர் பலராமன் நன்றி கூறினார்.