ADDED : ஆக 14, 2011 07:06 PM
புதுடில்லி: ஊழல் மற்றும் காமன்வெல்த் முறைகேடு தொடர்பாக பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டுள்ளதால் பார்லிமென்டின் இரு அவைகளும் தினசரி ஒத்திவைக்கப்படுகின்றன.
இந்நிலையில் இது குறித்து டில்லியில்பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம் குறித்தும், தேசிய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.