/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில் பாதை திட்டப் பணிகளில் வேண்டும் "ஜரூர்!' பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்ரயில் பாதை திட்டப் பணிகளில் வேண்டும் "ஜரூர்!' பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்
ரயில் பாதை திட்டப் பணிகளில் வேண்டும் "ஜரூர்!' பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்
ரயில் பாதை திட்டப் பணிகளில் வேண்டும் "ஜரூர்!' பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்
ரயில் பாதை திட்டப் பணிகளில் வேண்டும் "ஜரூர்!' பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்
ADDED : ஆக 22, 2011 12:02 AM
பொள்ளாச்சி : 'போத்தனூர் திண்டுக்கல் அகல ரயில்பாதை திட்டப்பணிகளை
விரைவுப்படுத்த வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி தொழில்
வர்த்தக சபையின் ஆண்டு கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் வெங்கடேஷ்
வரவேற்றார். தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொள்ளாச்சியை
பகுதியில் உள்ள சுற்றுலா மையங்களை மேம் படுத்த, பொள்ளாச்சியில் சுற்றுலா
மைய அலுவலகத்தை துவங்க வேண்டும்; பொள்ளாச்சி, உடுமலை, பழநி பகுதி மக்கள்
பயன்பெறும் வகையில், பொள்ளாச்சி திண்டுக்கல், பொள்ளாச்சி பாலக்காடு
போத்தனூர் வழித்தடம் அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகளை, விரைவில் நிறைவு
செய்ய வேண்டும்; இதற்கான நிதி ஒதுக்கீடை, மத்திய அரசு செய்ய வேண்டும்;
பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் நடக்கும் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை
விரைவில் நிறைவு செய்ய, ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சியில், மக்கள் தொகை, வாகனங்களின் நெரிசல் காரணமாக, போக்குவரத்து
அதிகளவில் உள்ளது. இந்நிலையில், நகரின் முக்கிய சாலையோரங்களில், குடிநீர்
குழாய் பதித்தல், தொலைபேசி இணைப்பு காரணமாக குழிகள் தோண்டப்படுகின்றன. மழை
காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு, முக்கிய வழித்தட சாலைகள் குண்டும், குழியுமாக
காட்சியளிக்கின்றன. இதில், கோட்டூர் சாலைக்கு மாற்றுப் பாதையாக
பயன்படுத்தப்படும் மரப்பேட்டை பார்க் சாலை, பத்ரகாளியம்மன் கோவில் வீதி,
கடை வீதி, சத்திரம் வீதி உட்பட சாலைகள் போக்குவரத்துக்கு முற்றிலும்
பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்
அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறையினரும்,
நகராட்சியும், முக்கிய சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்; உலகம்
வெப்பமயமாதல், வாயு மண்டலத்தில் மாசுபடுத்துதல் என, சுற்றுச்சூழல்
பாதிக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர்க்க, கோவை மாவட்டத்தில், சிறுதுளி
அமைப்பு சார்பில் அக்., 15ம் தேதி, ஒரு லட்சத்து 4,500 மரக்கன்றுகள் நட
திட்டமிட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பொள்ளாச்சி தொழில்
வர்த்தக சபை சார்பில் தன்னார்வ அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன்
இணைந்து, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது என்பன உட்பட பல தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. தேசிய அளவில் சிறந்த மாம்பழ உற்பத்தியாளர் விருது பெற்ற
சேதுபதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பொரு ளாளர் சந்திரன், செயலாளர்
கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


