/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மருத்துவப் பரிசோதனை போலீசார் பங்கேற்புமருத்துவப் பரிசோதனை போலீசார் பங்கேற்பு
மருத்துவப் பரிசோதனை போலீசார் பங்கேற்பு
மருத்துவப் பரிசோதனை போலீசார் பங்கேற்பு
மருத்துவப் பரிசோதனை போலீசார் பங்கேற்பு
ADDED : ஆக 22, 2011 12:03 AM
ஆனைமலை : ஆனைமலையில், வால்பாறை உட்கோட்ட போலீசாருக்கு, நேற்று மருத்துவ
முகாம் நடந்தது.
ஆனைமலை மாசாணியம்மன் திருமண மண்டபத்தில் நடந்த முகாமில்,
வால்பாறை டி.எஸ்.பி., பழனிச்சாமி முன்னிலை வகித்தார். எஸ்.பி., உமா தலைமை
வகித்து பேசுகையில், ''போலீசாரின் பணி, சவால் நிறைந்த வகையில் உள்ளதால்,
தங்கள் உடல் நலனில், போதியளவு கவனம் செலுத்த வேண்டும்; குடும்பத்தில்
உள்ளவர்களின் நலனையும் கவனிக்க வேண்டும். இதனால், போலீசார் சார்பில்,
மருத்துவப் பரிசோதனை முகாம் அமைத்து, போலீசார் மற்றும் அவர்களது
குடும்பங்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார். டாக்டர்கள்
கணபதி, வசந்த், முருகபூபதி, விக்ரம், திருமூர்த்தி, சகுந்தலா, ரஞ்சித்,
ஜோதிசரவணன் பங்கேற்று, பரிசோதித்தனர். வால்பாறை இன்ஸ்பெக்டர்
ராதாகிருஷ்ணன், எஸ்.ஐ.,க்கள் வெங்கடேஷன், வெங்கடபெருமாள், முகாம்
ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாசாணியம்மன் கோவில் கண்காணிப்பாளர் செந்தமிழ்
செல்வன், கோவில் புலவர் லோகநாதீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


