/உள்ளூர் செய்திகள்/வேலூர்/முத்துமாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு பொன்விழாமுத்துமாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு பொன்விழா
முத்துமாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு பொன்விழா
முத்துமாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு பொன்விழா
முத்துமாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு பொன்விழா
ADDED : ஆக 27, 2011 11:37 PM
திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் டவுன் போலீஸ் லைன் முத்துமாரியம்மன் கோவில், 50ம் ஆண்டு திருவிழா, 30ம் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருப்பத்தூர் டி.எஸ்.பி., நடராஜன் தலைமை வகிக்கிறார். 30ம் தேதியன்று கணபதி பூஜை, கொடியேற்றம், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், 31ம் தேதி முதல் 4ம் தேதி வரை அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடக்கிறது. 7ம் தேதி காலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை 5 மணிக்கு அலங்கார புஷ்ப விமானத்தில் அம்மன் விநாயகர், முருகர் உற்சவமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது. இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், வெங்கடாஜலம், நாகராஜன், சாந்தலிங்கம் மற்றும் எஸ்.ஐ.,க்கள் பழனி, அன்பரசி, லட்சுமி, வீரமணி, லூர்துஜெயராஜ், சரோஜினி, ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


