Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தென்னை விவசாயிகளுக்கு தோட்ட கலைத்துறை அறிவுரை

தென்னை விவசாயிகளுக்கு தோட்ட கலைத்துறை அறிவுரை

தென்னை விவசாயிகளுக்கு தோட்ட கலைத்துறை அறிவுரை

தென்னை விவசாயிகளுக்கு தோட்ட கலைத்துறை அறிவுரை

ADDED : ஆக 29, 2011 12:09 AM


Google News
கிணத்துக்கடவு : 'கிணத்துக்கடவு பகுதி தென்னந்தோப்புகளில் 'கோகோ' சாகுபடி செய்தால், தென்னை விளைச்சல் அதிகரிக்கும்' என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் தென்னையில் ஊடுபயிராக 'கோகோ' பயிரிடுவதன் மூலம் தென்னை விளைச்சல் அதிகரிக்கிறது. ஆண்டுக்கு 800 கிலோ இலைகள் உதிர்வதால், மண்ணில் அங்கக சத்து உயர்கிறது. சிறந்த முறையில் களை கட்டுப்பாடு செய்யப்படுகிறது. மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் 'கோகோ' பயிரிடுவதற்கு 200 முதல் 220 நாற்றுகள் தேவைப்படும். ஆண்டுக்கு மரம் ஒன்றில் இருந்து இரண்டு கிலோ உலர் விதைகள் கிடைக்கும். ஆண்டு விளைச்சல் 400 கிலோ உயரும். ஆண்டு வருமானம் 28 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இதில் செலவு போக நிகர லாபம் 20 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முகமது இக்பால் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us