/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு மருத்துவமனைக்கு புதிய உபகரணங்கள் வந்தாச்சுஅரசு மருத்துவமனைக்கு புதிய உபகரணங்கள் வந்தாச்சு
அரசு மருத்துவமனைக்கு புதிய உபகரணங்கள் வந்தாச்சு
அரசு மருத்துவமனைக்கு புதிய உபகரணங்கள் வந்தாச்சு
அரசு மருத்துவமனைக்கு புதிய உபகரணங்கள் வந்தாச்சு
ADDED : ஆக 29, 2011 12:09 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகாக புதிதாக
உபகரணங்கள் மாநில அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அரசு
மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த
சில நாட்களாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் உபகரணங்கள் அதன் இயல்பை
இழந்த நிலையில் புதிய 'செட்கள்' வந்துள்ளது. ஒரு செட்டுக்கு எட்டாயிரம்
வீதம் இரண்டு செட்கள் வழங்கப்பட்டுள்ளது.வயிற்று பகுதிகளில் உள்ள
பிரச்னைகளுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான உபகரணங்கள்
வந்துள்ளன. இதன் மூலம் நல்ல முறையில் மேலும் அதிக சிகிச்சைகள்
மருத்துவமனையில் செய்யும் வாய்ப்புகள் உள்ளன என்றனர். ரத்ததான முகாம்:
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு சார்பில்
திருப்பூரில் ரத்த தான முகாம் நடந்தது. இதில் 102 யூனிட்கள் ரத்தம்
பெறப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் பங்கஜம்
தலைமையில் முகாம் நடந்தது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஆய்வக தொழில்நுட்ப
பணியாளர்கள் பாலமுருகன், சண்முகபிரியா, கருணாநிதி, செவிலியர்கள் தனலட்சுமி,
கிருஷ்ணவேனி உட்பட்ட மருத்துவ குழு முகாமில் பங்கேற்றனர்.


