/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்
தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்
தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்
தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்
ADDED : ஆக 30, 2011 12:07 AM
திருநெல்வேலி : நெல்லையில் ராஜிவ் கொலை வழக்கு கைதிகளுக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு வரும் 9ம்தேதி தூக்குத்தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது. மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் வகுப்புக்களை புறக்கணித்தனர். அனைவரும் கல்லூரி முன்பு ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் ராஜன் தலைமை வகித்தார். பின்னர் கோர்ட் முன்பும் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் நெல்லை - தூத்துக்குடி ரோட்டில் வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ, பாளை. உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், அருள், டிராபிக் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இப்போராட்டத்தால் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.


