/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சவுத் இந்தியன் வங்கியில் சேமிப்பு திட்ட வட்டி விகிதங்கள் அதிகரிப்புசவுத் இந்தியன் வங்கியில் சேமிப்பு திட்ட வட்டி விகிதங்கள் அதிகரிப்பு
சவுத் இந்தியன் வங்கியில் சேமிப்பு திட்ட வட்டி விகிதங்கள் அதிகரிப்பு
சவுத் இந்தியன் வங்கியில் சேமிப்பு திட்ட வட்டி விகிதங்கள் அதிகரிப்பு
சவுத் இந்தியன் வங்கியில் சேமிப்பு திட்ட வட்டி விகிதங்கள் அதிகரிப்பு
ADDED : ஆக 30, 2011 12:33 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சவுத் இந்தியன் வங்கியில் இருப்பு தொகை சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன.சவுத் இந்தியன் வங்கியில் இருப்பு சேமிப்பு தொகை திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
வங்கி இருப்பு சேமிப்பில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேமித்த காலம் (நாட்கள், மாதங்கள், ஆண்டுகள்) பொருத்து வட்டி விகிதம் மாற்றம் பெறுகிறது.பொள்ளாச்சி சவுத் இந்தியன் வங்கி மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:பொள்ளாச்சி சவுத் இந்தியன் வங்கியில் தற்போது சேமிப்பு திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு காலம் பொருத்து வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு தொகை வைத்திருக்கும் காலத்தில் 15- 45 நாட்கள் வரை பொதுவான வாடிக்கையாளர்களுக்கு 4 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 4.50 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சேமிப்பு திட்டத்தில் 46- 90 நாட்கள் வரை பொதுவான வாடிக்கையாளர்களுக்கு 4.50 சதவீதமும், மூத்தகுடிமக்களுக்கு 5 சதவீதமும், 91 - 180 நாட்கள் வரை 7 சதவீதமும், மூத்தகுடிமக்களுக்கு 7.50 சதவீதமும் வழங்கப்படுகிறது.300 நாட்களுக்கு பொதுவாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 10.50 சதவீதமும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை பொதுவாடிக்கையாளர்களுக்கு 9.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 10.25 சதவீதமும் வழங்கப்படுகிறது.ஐந்தாண்டுகளுக்கும் மேல் பொது வாடிக்கையாளர்களுக்கு 9.50 தசவீதமும், மூத்தகுடிமக்களுக்கு 10 சதவீதமும் வழங்கப்படுகிறது. நாட்கள் கணக்கில் அதிகரித்து வரும் வட்டி விகிதத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.


