/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பட்டா பெற வி.ஏ.ஓ.,விடம் விண்ணப்பிக்கலாம் : மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தகவல்பட்டா பெற வி.ஏ.ஓ.,விடம் விண்ணப்பிக்கலாம் : மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தகவல்
பட்டா பெற வி.ஏ.ஓ.,விடம் விண்ணப்பிக்கலாம் : மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தகவல்
பட்டா பெற வி.ஏ.ஓ.,விடம் விண்ணப்பிக்கலாம் : மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தகவல்
பட்டா பெற வி.ஏ.ஓ.,விடம் விண்ணப்பிக்கலாம் : மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தகவல்
ADDED : செப் 03, 2011 11:01 PM
மதுராந்தகம் : ''நிலத்திற்கு பட்டா பெற, கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்'' என, மதுராந்தகம் ஆர்.டி.ஓ., ஆலின் சுனேஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள், தங்களுக்குச் சொந்தமான நிலத்திற்கு பட்டா பெற, தாலுகா அலுவலகத்திற்கு வர வேண்டியதில்லை. கிராம நிர்வாக அலுவலரிடமே விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர் இல்லாத கிராமங்களைச் சேர்ந்தோர், அப்பகுதிக்கு கூடுதல் பொறுப்பு வகிக்கும் அலுவலரிடம், செவ்வாய்க் கிழமை அன்று விண்ணப்பிக்க வேண்டும். பட்டா கோரி விண்ணப்பிப்பவர், இறுதியாகப் பெற்ற கிரையப் பத்திரம், தாய் பத்திரம், 14 வருடங்களுக்கான வில்லங்கச் சான்று, ஆகியவற்றின் நகல்களை இணைத்து, திங்கட்கிழமை கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்து, ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. மனு அளித்த நாளிலிருந்து, இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை, மனுதாரர் தாலுகா அலுவலகம் சென்று, ரசீது மற்றும் நிலத்தின் மூல ஆவணங்களை, அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். தாலுகா மற்றும் கிராம நிர்வாக அலுவலக கணக்குகளில், 15 நாட்களுக்குள் உரிய மாற்றங்கள் செய்து, பட்டா மாற்ற ஆணை மற்றும் பட்டா, சிட்டா நகல்கள் வழங்கப்படும். உட்பிரிவு செய்து பட்டா பெற, கிராம நிர்வாக அலுவலரிடம், ஆவண நகல்களை இணைத்து, மனு அளிக்க வேண்டும். மனு அளித்த நாளிலிருந்து, நான்காவது வாரம் வெள்ளிக்கிழமை, தாலுகா அலுவலகம் சென்று, மூல ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்து சரி பார்க்க வேண்டும். ஆவணங்கள் சரியாக இருந்தால், உரிய கட்டணத்தைச் செலுத்தி, பட்டா மாற்றம் செய்து, பட்டா மற்றும் சிட்டா நகல்களை, 30 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம். பட்டா வழங்க இயலாத நிலையில், அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, மண்டல துணை தாசில்தார் பதில் அளிப்பார். இவ்வாறு, ஆர்.டி.ஓ., தெரிவித்தார்.


