Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சுடுகாட்டில் தகராறு: 10 பேர் மீது வழக்கு

சுடுகாட்டில் தகராறு: 10 பேர் மீது வழக்கு

சுடுகாட்டில் தகராறு: 10 பேர் மீது வழக்கு

சுடுகாட்டில் தகராறு: 10 பேர் மீது வழக்கு

ADDED : செப் 04, 2011 02:25 AM


Google News
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த பொறசக்குறிச்சி காலனியைச் சேர்ந்தவர் பெருமாள் (35).இவரது சகோதரி இந்திரா காந்தி(38) உடல்நிலை சரியில்லாமல் கடந்த 1ம் தேதி இறந்தார்.

இவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெருமாள் மற்றும் உறவினர்கள் சென்றனர். சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்யும் போது பிரேதத்தின் மீது போட்ட சேலையை எடுத்துக் கொண்டதில் ஏற்பட்ட பிரச்னையில் பெருமாள் மற்றும் உறவினர்களை உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கி மிரட்டினர். பெருமாள், ராஜேந்திரன், முத்து காயமடைந்து சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us