ADDED : செப் 04, 2011 11:28 PM
விழுப்புரம் : சாலையோரம் நடந்து சென்றவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இறந்தார்.
கண்டாச்சிபுரம் இந்திரா நகரை சேர்ந்த வடிவேல் மகன் செல்வகணபதி,38. இவர் கடந்த 2ம் தேதி இரவு கண்டாச்சிபுரம் மார்க்கெட் டில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அடுக்கம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் மகன் சேட்டு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி யதில் செல்வகணபதி பலத்த காயமடைந்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மறுநாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


