மீனாட்சி அம்மன் கோவில் டிபாசிட் பணம் எடுக்க முடியவில்லை: அமைச்சர் தகவல்
மீனாட்சி அம்மன் கோவில் டிபாசிட் பணம் எடுக்க முடியவில்லை: அமைச்சர் தகவல்
மீனாட்சி அம்மன் கோவில் டிபாசிட் பணம் எடுக்க முடியவில்லை: அமைச்சர் தகவல்
ADDED : செப் 07, 2011 11:33 PM
சென்னை: ''மதுரை நகர்ப்புற வங்கியில், மீனாட்சி அம்மன் கோவில் டிபாசிட் பணத்தை எடுக்க முடியவில்லை,'' என்று, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
மோகன் ராஜ்-தே.மு.தி.க.,: வர்த்தக வங்கிகள் போல கூட்டுறவு வங்கிகளை வளப்படுத்தி கிராம பொருளாதாரம் மேம்படுத்தப்படுமா?
அமைச்சர் செல்லூர் ராஜு: வர்த்தக வங்கிகள் போல கூட்டுறவு வங்கிகளை வளப்படுத்தி கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க., ஆட்சியில் கூட்டுறவு வங்கிகள் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை நகர்ப்புற வங்கியில், மிகப்பெரிய ஊழல் தி.மு.க., ஆட்சியில் நடந்துள்ளது.
அந்த வங்கியில் தான், மீனாட்சி அம்மன் கோவில் டிபாசிட் பணமும் உள்ளது. அந்தப் பணத்தை எடுக்க முடியாமல், அதை பெற, ரிசர்வ் வங்கி மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


