/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/காட்டேஜ்கள் பற்றிய கணக்கெடுப்பு தீவிரம் :அனுமதியில்லாத விடுதிகளுக்கு விரைவில் "கிடுக்கிப்பிடி'காட்டேஜ்கள் பற்றிய கணக்கெடுப்பு தீவிரம் :அனுமதியில்லாத விடுதிகளுக்கு விரைவில் "கிடுக்கிப்பிடி'
காட்டேஜ்கள் பற்றிய கணக்கெடுப்பு தீவிரம் :அனுமதியில்லாத விடுதிகளுக்கு விரைவில் "கிடுக்கிப்பிடி'
காட்டேஜ்கள் பற்றிய கணக்கெடுப்பு தீவிரம் :அனுமதியில்லாத விடுதிகளுக்கு விரைவில் "கிடுக்கிப்பிடி'
காட்டேஜ்கள் பற்றிய கணக்கெடுப்பு தீவிரம் :அனுமதியில்லாத விடுதிகளுக்கு விரைவில் "கிடுக்கிப்பிடி'
ADDED : செப் 08, 2011 01:29 AM
ஊட்டி : 'நீலகிரியில் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் காட்டேஜ்கள் குறித்த பட்டியல் சேகரித்து, மாவட்ட நிர்வாகத்திடம் விரைவில் ஒப்படைக்கப்படும்,' என மாவட்ட எஸ்.பி., தெரிவித்தார்.
ஊட்டி கூட்ஷெட் பகுதியில் உள்ள அனுமதியில்லாத காட்டேஜில் நேற்று முன்தினம் இருவர் கொலை செய்யப்பட்டனர்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு தங்கியவர்கள் குறித்த முழு பதிவுகள் ஏதும் காட்டேஜில் கிடைக்காததால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். கொலையான தஸ்தகீரின் திருமணம் நடக்க சில நாட்களே இருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு கிடைத்த மொபைல் போனில் உள்ள எண்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் உள்ளவர்கள் குறித்தும் ரகசிய விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், ஊட்டியில் அனுமதியில்லாமல் இயங்கும் காட்டேஜ்கள் குறித்து நீலகிரி எஸ்.பி., நிஜாமுதீன் கூறுகையில், ''இந்த கொலை சம்பவம் அனுமதியற்ற காட்டேஜில் நடந்துள்ளது. அந்த விடுதியில் பதிவேடுகள் ஏதும் பராமரிக்கப்படாததால் யார் தங்கியிருந்தார்கள் என்பதும் தெரியவில்லை. விசாரணையில் இது பின்னடைவாக அமைந்து விட்டது. ஊட்டி சுற்றுலா நகரமாக உள்ளதால் தற்போது அதிகளவில் காட்டேஜ்கள் பெருகி வருகின்றன. இதில், பல காட்டேஜ்கள் அனுமதியில்லாமல் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நீலகிரியில் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் காட்டேஜ்கள் குறித்து பட்டியல் சேகரித்து, மாவட்ட நிர்வாகத்திடம் விரைவில் ஒப்படைக்கப்படும். மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி, நகராட்சி மற்றும் வணிகவரித்துறை மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


